“விஜய் ஒரு சின்ன பையன்” – ரஜினிகாந்த்

ஐஸ்வர்யா இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் லால் சலாம். இந்த திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில், நடிகர் ரஜினிகாந்த் உரையாற்றியிருந்தார்.

அப்போது பேசிய அவர், நடிகர் விஜய் தொடர்பாக பல்வேறு தகவல்களை பகிர்ந்துக் கொண்டார்.

அதாவது, “தர்மத்தின் தலைவன் படத்தின்போது, சின்ன பையனாக இருந்து, ஷீட்டிங்கை பார்த்துக் கொண்டிருந்தார்.

அவரிடம், நல்ல படிக்க வேண்டும் என்று கூறினேன். அதன்பிறகு, அவர் உழைப்பால் பெரிய ஹீரோ ஆகிவிட்டார்.

அவருக்கும் எனக்கும் எந்த விதத்திலும், போட்டியே கிடையாது” என்று கூறி, பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

RELATED ARTICLES

Recent News