Connect with us

Raj News Tamil

ரஜினியை பார்த்து வயிறு எரிந்த பிரபல மாஸ் ஹீரோ!

சினிமா

ரஜினியை பார்த்து வயிறு எரிந்த பிரபல மாஸ் ஹீரோ!

ரஜினி சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ள லால் சலாம் திரைப்படம், வரும் 9-ஆம் தேதி அன்று வெளியாக உள்ளது. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா, சமீபத்தில் நடைபெற்றது.

இதில் பேசிய நடிகர் ரஜினிகாந்த், தன்னுடைய ஜெயிலர் திரைப்படத்தை, பிரபல நடிகர் ஒருவர் பார்த்ததாக தெரிவித்தார்.

மேலும், அந்த திரைப்படம் 30 சதவீதம் நன்றாக உள்ளது என்றும், மீதமுள்ள 70 சதவீதம் எனக்கு வயிறு எரிகிறது. உனக்கு மட்டும் எப்படி இதுமாதிரி இயக்குநர்கள் கிடைக்கிறார்கள் என அந்த பிரபல நடிகர் கூறியதாக ரஜினி தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய சூப்பர் ஸ்டார், அந்த நடிகர் கடந்த 10 வருடங்களாக வெற்றி எதுவும் பெறாமல் உள்ளதாகவும் தெரிவித்தார்.

இதனை வைத்து பார்க்கும்போது, அந்த நடிகர் சிரஞ்சீவி அல்லது மோகன் பாபு-ஆக இருக்கலாம் என ரசிகர்கள் கெஸ் பண்ணியுள்ளனர்.

More in சினிமா

To Top