சினிமா
நம்பவே முடியாத மாஸ் கூட்டணி.. ரஜினி லாக் செய்த இயக்குநர்.. தேசிய விருது கன்ஃபார்ம்..
நெல்சன் இயக்கத்தில், சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், ஜெயிலர் படத்தில் ரஜினிகாந்த் நடித்து வருகிறார். இதற்கு பிறகு, எந்த படத்தில் நடிப்பார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து கிடக்கின்றனர். இதற்கிடையே, பல்வேறு இளம் இயக்குநர்களிடம் அவர் கதை கேட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், சூர்யாவின் ஜெய் பீம் படத்தை இயக்கிய டி.ஜே.ஞானவேல் இயக்கத்தில், ரஜினி கூட்டணி வைக்க உள்ளதாக கூறப்படுகிறது. அதாவது, இயக்குநர் டி.ஜே.ஞானவேல், ரஜினியிடம் கதை ஒன்றை கூறியுள்ளாராம்.
இது தனக்கு பிடித்துவிட்டதால், நிச்சயம் படமாக பண்ணலாம் என்று ரஜினி உறுதி அளித்துள்ளாராம். உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து, இந்த திரைப்படம் உருவாக உள்ளதாகவுமு் கூறப்படுகிறது. இதுவரை தேசிய விருது பெறாமல் இருந்த ரஜினிக்கு, இந்த படத்தின் மூலம், அந்த குறை நீங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
