Connect with us

Raj News Tamil

மருதநாயகம் படத்தில் ரஜினிகாந்த்! ஆச்சரிய தகவல்!

சினிமா

மருதநாயகம் படத்தில் ரஜினிகாந்த்! ஆச்சரிய தகவல்!

தமிழ் சினிமாவின் புது டெக்னாலஜி பயன்படுத்தினாலும், புது திரைக்கதை பயன்படுத்தினாலும், அதனை முதலில் கொண்டு வந்தவராக இருப்பவர் கமல் தான். அத்தகைய மகா கலைஞன் உருவாக்கிய பிரம்மாண்ட திரைப்படம் தான் மருதநாயகம்.

பாதி ஷூட்டிங் வரை முடிந்த அந்த திரைப்படம், அதன்பிறகு ஏற்பட்ட பணப்பிரச்சனை காரணமாக, பாதியிலேயே நிறுத்தப்பட்டது.

இந்நிலையில், இந்த திரைப்படம் தொடர்பாக, தற்போது புதிய, ஆச்சரிய தகவல் ஒன்று கிடைத்துள்ளது. அதாவது, இந்த பிரம்மாண்ட திரைப்படத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பதற்கு ஆசைப்பட்டாராம்.

ஆனால், அனைத்து கதாபாத்திரங்களுக்கும், நடிகர்கள் தேர்வு செய்யப்பட்டுவிட்டதால், ரஜினிகாந்த் நடிக்க முடியாமல் போனதாம்.

இதுமட்டுமின்றி, இந்த திரைப்படத்தில் நடிப்பதற்கு, சம்பளமே வேண்டாம் என்று, ரஜினிகாந்த் கூறியதாகவும் சொல்லப்படுகிறது.

More in சினிமா

To Top