ஜீத்து ஜோசப் இயக்கத்தில், மோகன் லால் நடிப்பில் உருவான திரைப்படம் த்ரிஷ்யம். குடும்பத்திற்கு பிரச்சனை ஏற்பட்டால், ஒருவர் எந்த எல்லைக்கும் செல்வார் என்பதை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த திரைப்படம், மிகப்பெரிய வெற்றியை பெற்றிருந்தது.
இதையடுத்து, இந்த திரைப்படம், தமிழில் பாபநாசம் என்ற பெயரில், ரீமேக் ஆகியிருந்தது. தமிழில், கமல் ஹாசன், கௌதமி, நிவேதா தாமஸ், எம்.எஸ்.பாஸ்கர் உள்ளிட்டோர் முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர்.
தமிழிலும், இப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றிருந்தது. இந்நிலையில், இப்படத்தில் முதலில் நடிக்க இருந்தது கமல் இல்லை என்று தகவல் ஒன்று பரவி வருகிறது. அதாவது, முதலில் இப்படத்தை ரீமேக் செய்வதற்கு, ரஜினியிடம் தான் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாம்.
அதன்பிறகு, அவர் தான் இந்த கதை, கமலுக்கு தான் சரியாக இருக்கும் என்று கூறினாராம். இதையடுத்து, கமல் அந்த படத்தில் நடித்து முடித்தாராம்.