Connect with us

Raj News Tamil

பயோபிக்காக உருவாகும் ரஜினியின் வாழ்க்கை! ஹீரோ யார்?

சினிமா

பயோபிக்காக உருவாகும் ரஜினியின் வாழ்க்கை! ஹீரோ யார்?

ஜெயலலிதா, பாரதி, அம்பேத்கர் என்று பல்வேறு பிரபலங்களின் வாழ்க்கை வரலாறு, திரைப்படமாக எடுக்கப்பட்டுள்ளது. தற்போது, இசையமைப்பாளர் இளையராஜாவின் வாழ்க்கை கதை, திரைப்படமாக உருவாகி வருகிறது.

இதில், நடிகர் தனுஷ் தான் ஹீரோவாக நடித்து வருகிறார். தற்போது, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் வாழ்க்கை கதை, திரைப்படமாக உருவாக இருப்பதாக, தகவல் வெளியாகியுள்ளது.

அதாவது, பாலிவுட்டில் இயக்குநராகவும், தயாரிப்பாளராகவும் பணியாற்றி வரும் சஜித் நதியத்வாலா என்பவர், இப்படத்தை தயாரிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

இப்படத்தின் திரைக்கதை எழுதும் பணி தற்போது நடந்து வருவதாகவும், விரைவில் இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகலாம் என்றும் தகவல் கசிந்துள்ளது. இந்த திரைப்படத்தில் ஹீரோவாக யார் நடித்தால் சிறப்பாக இருக்கும் என்று, பலரிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறதாம்.

More in சினிமா

To Top