Connect with us

Raj News Tamil

25 ஆண்டுகளை நிறைவு செய்த ரஜினியின் சூப்பர் ஹிட் திரைப்படம்..!!

சினிமா

25 ஆண்டுகளை நிறைவு செய்த ரஜினியின் சூப்பர் ஹிட் திரைப்படம்..!!

இயக்குனர் கே.எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் கடந்த 1999 ம் ஆண்டு வெளியான திரைப்படம் படையப்பா. இப்படத்தில் ரஜினிகாந்த், சௌந்தர்யா, ரம்யா கிருஷ்ணன், நாசர், செந்தில் உள்ளிட்ட பல நடிகர்கள் இதில் நடித்திருந்தனர்.

இப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. நீலாம்பரி என்ற கதாபாத்திரத்தில் ரம்யா கிருஷ்ணன் நடிப்பில் மிரட்டியிருந்தார். ஏ.ஆர் ரகுமான் இசையில் பின்னணி இசை மற்றும் பாடல்கள் அனைத்தும் ரசிகர்களை கவர்ந்தது.

அன்றைய காலகட்டத்தில் படையப்பா திரைப்படம் தான் தமிழ் சினிமாவின் இண்டஸ்ட்ரி ஹிட்டாக கொண்டாடப்பட்டது. தமிழ் சினிமாவில் முதன் முதலில் ரூ. 50 கோடிக்கும் மேல் வசூல் செய்த திரைப்படம் என்ற பெருமையும் கிடைத்தது.

இன்றுடன் படையப்பா திரைப்படம் வெளிவந்து 25 ஆண்டுகள் ஆன நிலையில் இதனை சமூக வலைத்தளத்தில் ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.

More in சினிமா

To Top