Connect with us

Raj News Tamil

புதுமாப்பிள்ளையுடன் ஜோடி சேரும் ரஜினியின் மகள்..!

சினிமா

புதுமாப்பிள்ளையுடன் ஜோடி சேரும் ரஜினியின் மகள்..!

கோச்சடையான், கோவா, வேலையில்லா பட்டதாரி2 ஆகிய படங்களை தயாரித்த சவுந்தர்யா ரஜினிகாந்த், பல வருடங்களுக்கு பிறகு மீண்டும் புதிய வெப் தொடர் ஒன்றை தயாரிக்கிறார்.

இந்த கேங்க்ஸ் வெப் தொடர், நோவா ஆபிரஹாம் இயக்கத்தில், நடிகர் அசோக் செல்வன் நடிப்பில் உருவாக உள்ளது. இதுகுறித்து சௌந்தர்யா சமூக வலைத்தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் ”2010 ஆம் ஆண்டு கோவா படத்தை தயாரித்தேன்.13 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் தயாரிப்பாளர் நாற்காலியில் அமர்ந்துள்ளேன். அனைவருடைய ஆசிர்வாதங்களோடு இன்று படப்பிடிப்பு தொடங்கியுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து, அசோக் செல்வன் மற்றும் சௌந்தர்யா ரஜினிகாந்த்தின் ரசிகர்கள் இருவருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துவருகின்றனர்.

More in சினிமா

To Top