கர்ணன், ஜெய் பீம், சர்தார் உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்து பிரபலம் அடைந்தவர் நடிகை ரஜிஷா விஜயன். இவர், தற்போது சர்தார் 2, பைசன் ஆகிய படங்களில் நடித்து முடித்துள்ளார்.
இந்நிலையில், நடிகை ரஜிஷா விஜயன், தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், உடல் எடை அதிகமாக இருந்தபோது எடுத்த புகைப்படத்தையும், உடல் எடையை குறைத்த பிறகு எடுத்த புகைப்படத்தையும் அவர் வெளியிட்டுள்ளார்.
இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள், அவரது Transformation-ஐ வெகுவாக பாராட்டி வருகின்றனர்.