ரஜினி – கமல் ஒரே படத்தில்! கேமியோ ரோலில் அஜித்! ஷாக் தந்த பிரபல இயக்குநர்!

சினிமா பயணம் தொடங்கப்பட்ட காலங்களில், ரஜினியும், கமலும் பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளனர். ஆனால், அதன்பிறகு சில காரணங்களால், அவர்களால் தொடர்ந்து நடிக்க முடியாமல் போனது.

இந்நிலையில், ரஜினி, கமல் இணைந்து, ஒரு படத்தில் நடிக்க இருப்பதாக, பிரபல இயக்குநர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

அதாவது, ரட்சகன், ஜோடி ஆகிய படங்களை இயக்கிய பிரவீன் காந்தி, ஊடகம் ஒன்றிற்கு பேட்டி அளித்துள்ளார்.

அதில், 40 வருடங்களுக்கு பிறகு, ரஜினி-கமல் இணைந்து நடிக்க உள்ளனர் என்று தெரிவித்துள்ளார். மேலும், ஷாருக்கான், அஜித் ஆகியோர் கேமியோ ரோலில் நடிக்க இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

இந்த தகவல் உண்மையாக நடப்பதாக இருந்தால், தமிழ் சினிமாவின் பிரம்மாண்டமாக படமாக அது மாறும் என்பது உறுதி..

RELATED ARTICLES

Recent News