உபி. குஜராத்தில் பாஜகவை விரட்டி அடிக்கும் ராஜபுத்திரர்கள்

மக்களவை தேர்தல் நடைபெற்று வரும் நிலையில் வட மாநிலங்களில் பாஜகவுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பி வருகிறது. இது பாஜகவினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது முக்கியமாக ராஜபுத்திரர்கள் தியாகிகள் மற்றும் சைனிகள் உட்பட இந்த ஆதிக்க சாதியினர் குஜராத் உத்தரபிரதேசத்தில் தங்களின் எதிர்ப்பை பதிவு செய்ய தொடங்கி உள்ளனர்.

மத்திய அமைச்சர் பர்ஷோத்தம் ரூபாலா ராஜபுத்திர சமூகத்தை சேர்ந்த பெண்களை இழிவு படுத்தி பேசியதால் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதனால் ராஜபுத்திரர்கள் இருக்கும் பகுதிகளில் பாஜகவினர் செல்லவே முடியவில்லை.
2 கட்ட தேர்தலில் பாஜகவிற்கு சிக்கல் ஏற்பட்ட நிலையில் மத்திய பிரதேசம், ராஜஸ்தான், உத்தர பிரதேசம், பீகாரில் உள்ள 30 தொகுதிகளில் பாஜகவிற்கு பின்னடைவு ஏற்பட்டு உள்ளது.

ராஜபுத்திரர்கள் பாஜகவினரை துரத்தி துரத்தி அடிப்பதாகவும் அதனால் பாஜக கடுமையான பின்னடைவை லோக்சபா தேர்தலில் சந்தித்து வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

RELATED ARTICLES

Recent News