ராமர் இந்துக்களுக்கு சொந்தமானது அல்ல – ஃபாருக் அதிரடி..!

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் தற்போது குடியரசு ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இம்மாநிலத்தின் அக்னூர் மாவட்டத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் முன்னாள் முதல்வர் ஃபாருக் அப்துல்லா கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது பேசிய அவர், ராமர் இந்துக்களுக்கு மட்டும் சொந்தமானவர் அல்ல என்றார். மேலும் எந்த மதமும் கெட்டது இல்லை மனிதர்கள் தான், ஊழல் செய்கின்றனர் என்று பேசினார்.

தொடர்ந்து பேசிய ஃபாருக், ஜம்மு காஷ்மீருக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்று மத்திய அரசை சாடினார். 5000 வேலை வாய்ப்புகள் வழங்கப்படும் என்ற மத்திய அரசின் வாக்குறுது எங்கே..? என்று கேள்வி எழுப்பினார். ஜம்மு காஷ்மீர் மாநில அந்தஸ்தை மீட்டெடுப்போம் என்ற அவர், ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் மீண்டும் ஒரே அமைப்பாக மாறும் காலம் வெகு தொலைவில் இல்லை என்றார்.