உத்தரப்பிரேதச மாநிலத்தில் அமைந்துள்ள அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமா் கோயில் வருகிற ஜனவாி 22 ஆம் தேதி கும்பாபிஷேகம் நடத்தப்படவுள்ளது .இதற்கு பல்வேறு இடங்களில் இன்றளவும் அழைப்பு விடுக்கப்பட்டுவருகிறது.
இந்நிலையில்,பாஜக சாா்பில் பூத் கமிட்டி அமைக்கப்பட்டு கோயில் கும்பாபிஷேகம் நேரடி ஒளிபரப்பு செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாம்.மேலும், பல்வேறு கோயில்களில் , ராமா் கோயில் கும்பாபிஷேகம் நேரடி ஒளிபரப்பு செய்யவுள்ளனா். இதனையடுத்து பல்வேறு நாடுகளில் அமைந்துள்ள இந்திய தூதரகங்களிலும் நேரடி ஒளிபரப்பு செய்யவுள்ளனா். இதைத்தாண்டி அமெரிக்காவில் உள்ள நியூயார்க் டைம்ஸ் சதுக்கத்தில் அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேக விழா நேரலையில் ஒளிபரப்பப்படவுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.