தமிழக அரசியலில் குறிப்பிடத்தக்க வாக்கு வங்கி வைத்திருக்கும் கட்சிகளில் ஒன்று பாட்டாளி மக்கள் கட்சி. இந்த கட்சியின் தலைவராக ராமதாஸின் மகன் அன்புமணி இருந்து வந்தார்.
இந்நிலையில், விழுப்புரம் மாவட்டம் தைலாபுரம் பகுதியில், பா.ம.க. நிறுவனர் ராமதாஸ், செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், பாமகவின் தலைவராக இனிமேல் நானே செயல்படுவேன் என்று அறிவித்துள்ளார்.
மேலும், பதவி ஆசை தனக்கு இல்லை என்றும், வரும் சட்டமன்ற தேர்தலையொட்டி, இளைஞர்களை வழிநடத்தவே இந்த முடிவை எடுத்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
தொடர்ந்து பேசிய ராமதாஸ், பாட்டாளி மக்கள் கட்சியின் செயல் தலைவராக, அன்புமணி செயல்படுவார் என்றும், தான் தலைவராக பொறுப்பேற்றதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளது. அதனை வெளியில் சொல்ல முடியாது எனவும், அவர் கூறியுள்ளார்.