தேவையில்லாமல் வீடியோ வெளியிட்டு வாங்கிக்கட்டிக் கொண்ட ராம்சரண்!

மணிரத்னம் இயக்கத்தில், ஏ.ஆர்.ரகுமான் இசையில், விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி நடிப்பில், சமீபத்தில் வெளியான திரைப்படம் பொன்னியின் செல்வன். பெரும் வெற்றியை பெற்றுள்ள இந்த திரைப்படம், பல வரலாற்று திரைப்படங்களுக்கு டிரெண்ட் செட்டராக அமைந்துள்ளது.

இவ்வாறு, இந்தியா முழுவதும் உள்ள ரசிகர்கள் பலரும், பொன்னியின் செல்வனை புகழ்ந்து வருகின்றனர். இந்நிலையில், அமெரிக்காவில் உள்ள திரையரங்கு ஒன்றில், ராஜமௌலியின் RRR திரைப்படம் திரையிடப்பட்டுள்ளது. அந்த திரையிடலுக்கு பிறகு ரசிகர்களை சந்தித்த ராஜமௌலி, அவர்களது பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்துள்ளார்.

இதுதொடர்பான வீடியோவை பகிர்ந்துள்ள தெலுங்கு நடிகர் ராம்சரண், ஒண் அன்ட் ஒண்லி ராஜமௌலி காரு என்று கேப்ஷன் வைத்துள்ளார். பொன்னியின் செல்வன் வெளியாகியுள்ள இந்த நேரத்தில், ராம்சரண் வெளியிட்டுள்ள இந்த வீடியோ, பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

பொன்னியின் செல்வன் பெற்று வரும் புகழை மறைக்கவே அவர் இந்த வீடியோ வெளியிட்டுள்ளதாக விமர்சித்து வருகின்றனர். மேலும், இதைவிட அதிகமான கூட்டத்தை TTF வாசனே கூட்டிவிடுவார் என்றும், ராம்சரணின் பதவிற்கு கீழே கமெண்ட் பதிவிட்டு வருகின்றனர்.