கே.எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் 1999ம் ஆண்டு வெளியான திரைப்படம் படையப்பா. இப்படத்தில் ரஜினிகாந்த், சிவாஜி கணேசன், சௌந்தர்யா, ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இதில் நீலாம்பரி என்ற கதாபாத்திரத்தில் ரம்யா கிருஷ்ணன் சிறப்பான நடிப்பை கொடுத்து அசத்தியிருந்தார்.
இவருடைய நடிப்பில் வெளியான பல படங்களில் கதாபாத்திரத்திற்கு ஏற்றவாறு சிறப்பான நடிப்பை கொடுத்து வந்தார். தற்போது நீண்ட இடைவெளிக்கு பிறகு ஜெயிலர் படத்தில் ரஜினிகாந்தும் ரம்யா கிருஷ்ணனும் நடித்துள்ளனர்.
ஜெயிலர் படத்திற்காக ரம்யா கிருஷ்ணன் 80 லட்ச ரூபாய் மட்டுமே சம்பளம் பெற்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. திறமையான நடிகை என பெயர் வாங்கிய ரம்யா கிருஷ்ணனுக்கு குறைவான சம்பளத்தை கொடுத்திருப்பது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.