ஜெயிலர் படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு, டி.ஜே.ஞானவேல் இயக்கும் புதிய திரைப்படத்தில், ரஜினி நடிக்க உள்ளார்.
இந்த திரைப்படத்தை, லைக்கா புரொடக்ஷன் தான் தயாரிக்க உள்ளது. இந்த திரைப்படத்தில், அமிதாப் பச்சன், ஃபகத் ஃபாசில், மஞ்சு வாரியர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளனர்.
இந்நிலையில், இப்படத்தில் பாகுபலி பட நடிகர் முக்கிய வேடம் ஒன்றில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதாவது, நடிகர் ராணா டகுபதி, இப்படத்தில் நடிக்க உள்ளாராம். இந்த தகவல், படத்தின் மீதான எதிர்பார்ப்பை வேற லெவலில் அதிகரித்துள்ளது.