தேசிய விலங்கிற்கு இப்படி ஒரு கொடுமையா? – பொங்கியெழுந்த பிரபல நடிகர்!

பீகார் மாநிலம் சம்பரன் பகுதியில், 9-பேரை காவு வாங்கிய புலி வனத்துறையால் சுட்டுக்கொல்லப்பட்டது. இறந்த புலியை காண அப்பகுதியை சேர்ந்தவர்கள் ஏராளமானோர் அங்கு குவிந்தனர். பின்னர், அந்த புலியை எட்டி உதைத்தும், மீசையை பிடித்து இழுத்தும் கொடுமை செய்தனர்.

இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலானதை தொடர்ந்து, பிரபல பாலிவுட் நடிகர் ரன்தீப் ஹூடா மனவேதனையோடு சமூக வலைதளங்களில் பதிவு செய்துள்ளார். இதுகுறித்து டிவிட்டர் செய்துள்ள அவர், ஒரு தேசிய விலங்கை இப்படியா கொடுமை செய்வது என கேள்வி எழுப்பியுள்ளார்..