கோவை மேயராக ரங்கநாயகி தேர்வு!

கோவை மாநகராட்சி மேயராக போட்டியின்றி ரங்கநாயகி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.

கோவை மாநகராட்சியில் 100 வார்டுகள் உள்ளது. இங்கு உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட்டபோது 96 வார்டுகளில் திமுக மற்றும் திமுக கூட்டணி கட்சிகள் கைப்பற்றியது. 3 வார்டுகளை அதிமுகவும், 1 வார்டில் எஸ்டிபிஐ கட்சியும் வெற்றி பெற்றது.

இதனையடுத்து கோவை மாநகராட்சி மேயராக கல்பனா ஆனந்தகுமார் தேர்வு செய்யப்பட்டார். உடல் நலக்குறைவு மற்றும் தனிப்பட்ட காரணங்களுக்காக அவர் சமீபத்தில் மேயர் பதவியை ராஜினாமா செய்தார்.

திமுக சார்பில் மேயர் வேட்பாளராக 29 வது வார்டு உறுப்பினர் ரங்கநாயகி அறிவிக்கப்பட்டார்.

இந்நிலையில், கோவை மாநகராட்சி மேயராக ரங்கநாயகி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.

அமைச்சர்கள் கே.என் நேரு, முத்துசாமி ஆகியோர் முன்னிலையில் கோவை மாநகராட்சி புதிய மேயராக ரங்கநாயகி பொறுப் பேற்றுக்கொண்டார்.

தொடர்ந்து அமைச்சர்கள், கவுன்சிலர்கள் திமுக பொறுப்பாளர்கள் பூங்கொத்து கொடுத்து வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

RELATED ARTICLES

Recent News