ஒண்ணுனா பரவாயில்ல.. இத்தனை பாடலா.. வாரிசு படக்குழுவை ரவுண்டு கட்டி அடிக்கும் ரசிகர்கள்..

வாரிசு படத்தின் ரஞ்சிதமே என்ற பாடல் கடந்த 5-ஆம் தேதி அன்று வெளியானது. பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இந்த பாடல், ரசிகர்களின் பெரும் ஆதரவை பெற்றது. எந்த அளவிற்கு ஆதரவு இருந்ததோ, அதே அளவிற்கு விமர்சனமும் இருந்தது.

அதாவது, இந்த பாடலின் இசை அஜித் நடித்த ‘அவள் வருவாளா’ படத்தின் சிக்கி முக்கி உய்யாளா பாடலின் மெட்டு என நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர். மேலும், மொச்சக்கொட்ட பல்லழகி என்ற நாட்டுப்புற பாடலின் சாயல் இருப்பதாகவும் மீம் கிரியேட்டர்கள் தாழித்து வருகின்றனர்.

இதுமட்டுமின்றி, ஏற்கனவே தமனே இசையமைத்திருந்த, வாடி வாடி கியூட் பொண்டாட்டி பாடல் இசை போலவும் இருப்பதாக விமர்சனம் எழுந்துள்ளது. எவ்வளவு விமர்சனங்கள் இருந்தாலும், பாடல் பெரிய ஹிட் அடித்தது என்பது தான் நிதர்சனமான உண்மை…