ரஞ்சிதமே பாடல் செய்த முதல் சாதனை!

வம்சி இயக்கத்தில், விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் வாரிசு. சமீபத்தில், இந்த படத்தின் ரஞ்சிதமே என்ற பாடல் வெளியாகி, ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.

இருப்பினும், அரபிக் குத்து படைத்த சாதனைகளை, இந்த பாடல் முறியடிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இது படக்குழுவினருக்கு சற்று ஏமாற்றத்தை அளித்திருந்தது.

இந்நிலையில், இந்த பாடல், 50 மில்லியன் பார்வையாளர்களை கடந்து, தனது முதல் சாதனையை பதிவு செய்துள்ளது. இதனால், விஜய் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.