ரஞ்சிதமே பாடல் செய்யத் தவறிய சாதனை!

விஜய் நடித்து வரும் வாரிசு திரைப்படத்தின் ரஞ்சிதமே பாடல், கடந்த 5-ஆம் தேதி அன்று வெளியானது. பெரும் வரவேற்பை பெற்றுள்ள இந்த பாடல், ரசிகர்களின் பேராதரவை பெற்று வருகிறது.

இருப்பினும், அரபிக் குத்து பாடலின் சாதனையை, இந்த பாடல் முறியடிக்கவில்லையாம். அதாவது, அரபிக் குத்து பாடல், 24 மணி நேரத்தில், 23.7 மில்லியன் பார்வையாளர்களை பெற்றது.

ஆனால், சமீபத்தில் வெளியான ரஞ்சிதமே பாடல், 24 மணி நேரத்தில், 18.5 மில்லியன் பார்வையாளர்களை மட்டுமே பெற்றுள்ளது. இந்த தகவல் வாரிசு படக்குழுவிற்கு ஏமாற்றத்தை அளித்தாலும், ரஞ்சிதமே பாடல் தான் தற்போது வரை, டிரெண்டிங்கில் முதலிடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.