வெளியானது வாரிசு பர்ஸ்ட் சிங்கில்!

வம்சி இயக்கத்தில், விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் வாரிசு. தமன் இசையமைத்துள்ள இந்த படத்தின், பா்ஸ்ட் சிங்கில் பாடல் இன்று வெளியாகும் என்று படக்குழு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதன்காரணமாக, விஜயின் ரசிகர்கள் பெரும் ஆவலோடு காத்திருந்தனர். இந்நிலையில், சொன்னபடி, இன்று பாடல் வெளியாகி, பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. தற்போது, லிரிக்கல் வீடியோவாக வெளியாக இந்த பாடலில், விஜய் நடனம் ஆடும் க்ளிப்பும் ஆங்காங்கே சேர்க்கப்பட்டுள்ளது.