பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் ரன்வீர் சிங். இவர் அடுத்ததாக ஆதித்ய தார் இயக்கும் படத்தில் நடிக்க உள்ளார்.
இந்த திரைப்படம் தொடர்பான முக்கிய அப்டேட் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி, இந்த திரைப்படத்தில், நடிகர் ரன்வீர் சிங்கிற்கு ஜோடியாக, நடிகை சாரா அர்ஜூன் நடிக்க உள்ளார்.
இவர், தெய்வத் திருமகன் படத்தில் நடிகர் விக்ரமுக்கு மகளாகவும், பொன்னியின் செல்வன் படத்தில், ஐஸ்வர்யா ராயின் இளவயது கதாபாத்திரமாகவும் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.