மதுரை மாவட்டத்தை சேர்ந்த ராப் கலைஞர் தேவ் ஆனந்த், நேற்று சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக் கொண்டார். நிகழ்ச்சி அனைத்தும் முடிந்த பிறகு, மீண்டும் தனது ஊருக்கு சென்றுக் கொண்டிருந்தார்.
அப்போது, அவரை வழிமறித்த மர்ம நபர்கள், கத்தி முனையில் வைத்து கடத்திச் சென்றனர். இந்த தகவலை அறிந்த தேவ் ஆனந்தின் ரசிகர்கள், காவல்துறையில் புகார் அளித்தனர். அதன்பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.
இந்நிலையில், புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி பகுதியில், காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர். அப்போது, அங்கு வந்த காரை மடக்கி, பரிசோதனை செய்தனர். அந்த சோதனையில், ரேப் பாடகர் தேவ் ஆனந்தை கடத்தி செல்வது கண்டறியப்பட்டது.
இதையடுத்து, அவரை மீட்ட காவல்துறையினர், கடத்தல்காரர்கள் 5 பேரை கைது செய்தனர். இதையடுத்து, அந்த 5 பேரிடம் காவல்துறையினர் நடத்திய விசாரணையில், கடத்தலுக்கான காரணம் தெரியவந்தது.
அதாவது, தேவ் ஆனந்தின் சகோதரர் சிரஞ்சீவி, வேறொருவரிடம் இருந்து ரூபாய் 2.5 கோடியை கடனாக வாங்கியிருந்தார். இந்த கடன் தொகையை திரும்ப பெறுவதற்காக தான், இந்த கடத்தல் சம்பவம் நடந்துள்ளதாக தெரியவந்துள்ளது.