கேரளாவில் வசித்து வந்த பீகார் மாநில தம்பதியின் 5 வயது மகள் மாயமான சம்பவத்தில் அதேபகுதியை சேர்ந்த பீகார் மாநில இளைஞர் அஸ்பக் ஆலம், பாலியல் வன்கொடுமை செய்து சிறுமியை கொலை செய்தது தெரியவந்தது. மேலும், சிறுமியின் உடலை ஆலுவா மார்க்கெட்டிற்கு பின்புறம் உள்ள குப்பைக்கிடங்கில் 20 மணி நேர தேடுதலுக்கு பின் போலீசார் மீட்டனர்.
இந்நிலையில், இந்த வழக்கில் 110 நாட்கள் நடைபெற்ற விசாரணைக்கு பிறகு எர்ணாகுளம் போக்சோ கோர்ட் தீர்ப்பு வழங்கியுள்ளது. அதாவது, பாலியல் வன்கொடுமை, கொலை உள்ளிட்ட வழக்குகள் அஸ்பக் ஆலம் மீது பதிவு செய்யப்பட்டு தூக்குதண்டனை வழங்கியது. குற்றவாளி அஸ்பக் ஆலமிற்கு 5 ஆயுள் தண்டனையும் 7 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து கோர்ட்டு அதிரடியாக உத்தரவிட்டது.