தென்னிந்திய சினிமாவின் முன்னணி நாயகியாக வலம் வருபவர் ராஷ்மிகா மந்தனா. சமீபத்தில் விஜய் நடிப்பில் வெளியான வாரிசு படத்தில் நடித்த இவர், ரசிகர்களின் மனதை கொள்ளையடித்தார். இந்த நிலையில் ராஷ்மிகா மந்தனா நேற்று ரசிகர்களுடன் சமூக வலைதளத்தில் உரையாடினார்.
அப்போது ரசிகர் ஒருவர் இவர் விஜய்யுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து , விஜய்யை பற்றி ஒரு வார்த்தையில் கூறுங்கள் என்றார். அதற்கு பதிலளித்த ரஷ்மிகா லவ் என்று பதிலளித்தார். தற்போது இந்த பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.