Connect with us

Raj News Tamil

உயிர் தப்பிய ராஷ்மிகா! – பெருமூச்சு விட்ட ரசிகர்கள்!

சினிமா

உயிர் தப்பிய ராஷ்மிகா! – பெருமூச்சு விட்ட ரசிகர்கள்!

தமிழ், தெலுங்கு, இந்தி திரைப்படங்களில் நடித்து வருபவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. இவர் மும்பையில் இருந்து விமானத்தில் நடிகை ஷ்ரத்தா தாஸுடன் ஹைதராபாத் சென்றுகொண்டிருந்தார்.

விமானம் புறப்பட்டு அரைமணி நேரத்திலேயே தொழில் நுட்பக் கோளாறு ஏற்பட்டு விமானம் குலுங்கியுள்ளது. இதனால் விமானத்தில் பயணம் செய்த ராஷ்மிகா உள்ளிட்ட அனைத்து பயணிகளும் அதிர்ச்சி அடைந்தனர்.

உடனடியாக மும்பைக்கே விமானத்தைத் திருப்பியுள்ளார் விமானி. இதனை ராஷ்மிகா தனது சமூக வலைத்தளத்தில் ஒரு புகைப்படம் மூலம் தெரிவித்துள்ளார். அதாவது, முன்புற இருக்கையை தங்களது காலால் அழுத்தமாக மிதித்தபடி இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு, ‘இப்படித்தான் உயிர் பிழைத்தோம்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

ராஷ்மிகாவின் வெளியிட்ட இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

More in சினிமா

To Top