Connect with us

Raj News Tamil

ராஷ்மிகா மந்தனாவின் அடுத்த ஹீரோ இவரா?

சினிமா

ராஷ்மிகா மந்தனாவின் அடுத்த ஹீரோ இவரா?

சுல்தான் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. இந்த படத்திற்கு பிறகு, இவர் வாரிசு படத்தில் விஜய்-க்கு ஜோடியாக நடித்திருந்தார்.

ஆனால், அதன்பிறகு தமிழ் சினிமாவில் நடிக்காமலே இருந்தார். இந்நிலையில், இவரது அடுத்த படம் தொடர்பான அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது.

அதாவது, சேகர் கம்முலா என்ற பிரபல தெலுங்கு இயக்குநர், புதிய படம் ஒன்றை இயக்க உள்ளார்.

தனுஷ் ஹீரோவாக நடிக்கும் இந்த படத்தில் தான், ராஷ்மிகா நடிக்க உள்ளாராம். இப்படத்தில், நடிகர் நாகர்ஜுனாவும் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

More in சினிமா

To Top