தென்னிந்திய சினிமாவை ”கலங்கப்படுத்திய ராஷ்மிகா”..!

தென்னிந்திய சினிமாக்களில் முன்னணி ஹீரொயினாக திகழ்பவர் ராஷ்மிகா மந்தனா. ஹீரோக்களுக்கு இணையாக ரசிகர்களை வைத்திருக்கும் இவர், தமிழ், தெலுங்கு மட்டுமில்லாது ஹிந்தியிலும் பிசியான நடிகையாக மாறியுள்ளார்.

அந்த வகையில் மிஷன் மஞ்சு என்ற ஹிந்தி படத்தில் நடித்து வரும் ராஷ்மிகா, அப்படத்தின் புரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது பேசிய இவர், தென்னிந்திய சினிமாவில் ஐட்டம் பாடல்களும், குத்துப்பாடல்களும் தான் அதிகம் என்றும், பாலிவுட் சினிமாவிலோ நல்ல ரொமாண்டிக் பாடல்கள் உள்ளது எனக்கூறி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார்.

இத்தகைய, தென்னிந்திய சினிமை அவமானப்படுத்தும் பேச்சுக்கும் பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.