Connect with us

Raj News Tamil

அரசு மருத்துவமனை கேண்டீனில் உள்ள உணவை ருசி பார்த்த எலி – அதிர்ச்சி வீடியோ

தமிழகம்

அரசு மருத்துவமனை கேண்டீனில் உள்ள உணவை ருசி பார்த்த எலி – அதிர்ச்சி வீடியோ

சென்னை வண்ணாரப்பேட்டை பிரதான சாலை அமைந்துள்ள ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் ஆயிரக்கணக்கான உள்நோயாளிகள், மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் உள்ளனர்.

இந்நிலையில் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் செயல்படும் கேண்டீனில் நடைபெற்ற ஒரு சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அந்த கேண்டீனில் செய்யப்படும் வடை, பஜ்ஜி முதலிய பலகாரங்களை எலி உண்ணும் வீடியோ சமூக வலைதளங்களில் தீயாக பரவி வருகிறது.

திண்பண்டங்களை உண்ணூம் எலியின் வீடியோவை எடுத்து கொண்டதும் கடைக்காரருக்கும் அங்கு வந்த நோயாளியின் உதவியாளருக்கும் வாக்கு வாதம் ஏற்பட்டது. இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.

இது தொடர்பாக உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு கடையை மூட கோரி உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

Continue Reading
Advertisement
You may also like...

More in தமிழகம்

To Top