முதுமை தொடர்பான பல்வேறு பாதிப்புகள் காரணமாக ரத்தன் டாடா (86) மும்பையில் உள்ள பிரீச் கேண்டி மருத்துவமனையில் கடந்த திங்கள்கிழமை அனுமதிக்கப்பட்டார். அவரது உடல் நிலை சீராக இல்லை என்று தகவல்கள் பரவிய நிலையில், நேற்று (அக்.9) இரவு அவர் காலமானதாக டாடா சன்ஸ் தலைவர் என். சந்திரசேகரன் உறுதி செய்தார்.
இந்நிலையில், ரத்தன் டாடா மறைவை ஒட்டி இன்று (அக்.10) ஒரு நாள் மாநிலத்தில் துக்கம் அனுசரிக்கப்படுவதாக மகாராஷ்டிரா அரசு அறிவித்துள்ளது.
மேலும், அவரது உடலுக்கு முழு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு நடத்தப்படும் என்றும் அம்மாநில முதல்வர் ஏக்நாத் ஷிண்டே அறிவித்துள்ளார். இன்று மாலை நடைபெறும் இறுதிச் சடங்கில் மத்திய அரசின் சார்பில் அமித் ஷா கலந்து கொள்கிறார்.