பிரபல நடிகருக்காக ஒன்றாக இணைந்த வெற்றிமாறன்-பா.ரஞ்சித்!

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவர் வெற்றிமாறன். இவரைப் போன்று, இயக்குநர் பா.ரஞ்சித்தும், தவிர்க்க முடியாத, பல்வேறு படைப்புகளை கொடுத்துள்ளார்.

இந்நிலையில், பிரபல நடிகருக்காக, பா.ரஞ்சித்தும், வெற்றிமாறனும், ஒன்றாக இணைந்துள்ளனர். அதாவது, நடிகரும், இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனி, தற்போது ரத்தம் என்ற படத்தில் நடித்துள்ளார்.

இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியான நிலையில், வெற்றிமாறன், பா.ரஞ்சித், வெங்கட் பிரபு ஆகியோர் இணைந்து, அந்த டிரைலரில் பின்னணி குரல் கொடுத்துள்ளனர்.