அரசு மருத்துவமனையில் துள்ளி விளையாடும் எலிகள்..வைரல் வீடியோ

மத்திய பிரதேசம் மாநிலம் குவாலியர் நகரில் அரசு மருத்துவமனை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனையில் குழந்தைகள் வார்டில் எலிகள் சுற்றித் திரியும் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

இந்த வீடியோவை மத்திய பிரதேச காங்கிரஸ், எக்ஸ் சமூகவலைதளத்தில் பகிர்ந்து, மாநிலத்தில் உள்ள சுகாதார வசதிகளின் நிலை குறித்து விமர்சனம் செய்துள்ளது.

எலிகள் பிரச்னையை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கை எடுக்க மருத்துவமனை கண்காணிப்பாளருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் இதுபோன்ற நிலை ஏற்படாமல் இருக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என மருத்துவமனை தரப்பில் கூறப்பட்டுள்ளது.

RELATED ARTICLES

Recent News