ஒரு கிடாயின் கருணை மனு, லவ் டுடே, மாமன்னன் உள்ளிட்ட படங்களில், முக்கிய வேடத்தில் நடித்திருந்தவர் ரவினா ரவி.
முன்னணி டப்பிங் கலைஞராகவும் பணியாற்றி வரும் இவர், வாலாட்டி என்ற மலையாள படத்தில், டப்பிங் பணி மேற்கொள்ள சென்றுள்ளார்.
அப்போது, இவருக்கும், அந்த படத்தின் இயக்குநர் தேவன் ஜெயக்குமாருக்கும் காதல் ஏற்பட்டதாக தகவல் பரவி வந்தது. இந்நிலையில், ரவினா ரவி தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த பதிவில், தேவன் ஜெயக்குமாரை காதலிப்பதை அவர் உறுதி செய்துள்ளார். இதனை அறிந்த சினிமா உலகினர், அவர்களுக்கு தங்களது வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.