மகாலட்சுமி கணவர் ரவீந்தர் பற்றி பரவும் அந்த தகவல் உண்மையா?

நடிகை வனிதா விஜயகுமாரை விமர்சனம் செய்தே பெரும் பிரபலம் அடைந்தவர் தயாரிப்பாளர் ரவீந்தர். இவர், தனது முதல் திருமணம் தோல்வியில் முடிந்ததால், விஜே மகாலட்சுமியை சமீபத்தில் இரண்டாவது திருமணம் செய்துக் கொண்டார்.

பல்வேறு விமர்சனங்கள் இந்த தம்பதியினர் மீது வைக்கப்பட்டாலும், அதனை அவர்கள் தைரியமாக எதிர்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், இந்த தம்பதியினர் தொடர்பான தகவல் ஒன்று வெளியாகி, வைரலாக பரவி வருகிறது. அதன்படி, பிக்-பாஸ் நிகழ்ச்சியின் 6வது சீசனில் ரவீந்தர் கலந்துக் கொள்ள உள்ளாராம்.

இவர் மட்டுமின்றி, இவரது மனைவி மகாலட்சுமியும் பிக்-பாஸ் வீட்டிற்குள் செல்ல வாய்ப்பு இருக்கிறதாம். இந்த தகவல் உண்மையாகும் பட்சத்தில், நிகழ்ச்சியின் பரபரப்புக்கு எல்லை இல்லாமல் இருக்கும் என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர். பிக் பாஸ் நிகழ்ச்சியின் 6-வது சீசன், வரும் அக்டோபர் 9-ஆம் தேதி முதல் ஒளிப்பரப்பாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.