“ஜெயலலிதா எம்.ஜி.ஆரின் மறுஉருவம் தான் பழனிசாமி” – ஆர்.பி.உதயகுமார் வீடியோ!

அத்திக்கடவு அவிநாசி திட்டத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டதற்காக, எதிர்கட்சித் தலைவர் பழனிசாமிக்கு, விவசாயிகள் கூட்டமைப்பு சார்பில், பாராட்டு விழா நடத்தப்பட்டது. இந்த விழாவில், எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவின் புகைப்படங்கள் இடம்பெறவில்லை என்று கூறி, அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கலந்துக் கொள்ளவில்லை.

இது, அதிமுக வட்டாரங்களில், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில், நேற்று நடைபெற்ற எம்.ஜி.ஆர். பிறந்த நாள் தொடர்பான விழாவில், செங்கொட்டையன் கலந்துக் கொண்டு, அந்நிகழ்வில் பேசிய சில கருத்துக்கள் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.

இவ்வாறு தொடர்ச்சியாக, அதிமுகவில் சலசலப்பு ஏற்பட்டு வரும் நிலையில், முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோரின் மறுஉருவம் தான் பழனிசாமி என்றும், எதிரிகள், துரோகிகள் எடுத்துவைக்கும் வாதங்கள் அனைத்தும் அதிமுகவை அசைத்துக் கூட பார்க்க முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும், இது சோதனை காலம் என தொண்டர்கள் சோர்ந்துவிட வேண்டாம் என்றும், இந்த சோதனைகளை மன வலிமையுடன் எதிர்கொள்ள வேண்டும் என்றும், கூறியுள்ளார்.

RELATED ARTICLES

Recent News