CSK அணிக்கும், RCB அணிக்கும் இடையே ஐ.பி.எல் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில், பெங்களூர் அணி மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இந்த வெற்றியின் மூலமாக, அந்த அணியின் இன்ஸ்டாகிராமை பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
இதன்மூலம், 17.8 மில்லியன் பின்தொடர்பவர்களை பெற்று, அதிக ஃபாலேவர்களை கொண்ட அணி என்ற பெருமையை ஆர்.சி.பி பெற்றுள்ளது.
இதற்கு அடுத்த இடத்தில், 17.7 மில்லியன் பின்தொடர்பவர்களுடன் சி.எஸ்.கே அணி 2-ஆம் இடத்திலும், 16 மில்லியன் பின்தொடர்பவர்களுடன் மும்பை இந்தியன்ஸ் அணி 3-ஆம் இடத்திலும் உள்ளது.