ஆர்சிபி என்னை ஏமாற்றிவிட்டது: யுஸ்வேந்திர சாஹல்!

பெங்களூர் அணிக்காக தான் 8 ஆண்டுகளாக விளையாடியும் அவர்கள் என்னை தேர்வு செய்யாதது மிகவும் வருத்தமாக இருந்தது என யுஸ்வேந்திர சாஹல் கூறியுள்ளார்.

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர்கள் பட்டியலில் யுஸ்வேந்திர சாஹல் முதலிடத்தில் உள்ளார். 145 ஐபிஎல் போட்டிகளில் விளையாடியுள்ள சாஹல், 187 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்துள்ளார். இந்தியாவின் எந்த மைதானத்திலும் கட்டுக்கோப்புடன் பந்துவீசும் திறமை கொண்டவர். கடந்த 2 ஆண்டுகளாக ராஜஸ்தான் அணிக்காக விளையாடி வரும் இவர், அந்த அணியின் மிகமுக்கிய வீரராக உள்ளார்.

இது குறித்து அவர் பேசுகையில் கூறியதாவது : பெங்களூரு அணிக்காக 110க்கும் அதிகமான போட்டிகளில் விளையாடி இருக்கிறார். ஆனால் 2022ஆம் ஆண்டு நான் விடுவிக்கப்பட்ட போது அர்சிபி நிர்வாகத்திடம் இருந்து எந்த தகவலும் இல்லை. மெகா ஏலத்தில் எனக்காக எந்த எல்லைக்கும் செல்வோம் என்று கூறினார்கள்.

ஆர்சிபி அணிக்காக கிட்டத்தட்ட 8 ஆண்டுகளாக ஆடியும், என்னை மீண்டும் வாங்காததால் கோபமடைந்தேன். அந்த நேரத்தில் நான் அதிக தொகை கேட்டேன் என்றெல்லாம் வதந்தி பரவியது. ஆனால் அப்படி எதுவும் நான் கேட்கவில்லை. என் மதிப்பு என்னவென்று நன்றாக தெரியும். மெகா ஏலத்திற்கு பின் ஆர்சிபி அணியில் யாரிடமும் பேசவில்லை. ஆர்சிபி அணிக்கு எதிராக ஆடிய போது கூட, அந்த அணியின் பயிற்சியாளர்களிடம் நான் பேசவில்லை என்று தெரிவித்துள்ளார்.

அதேபோல் எப்போதும் சின்னசாமி மைதானம் தான் பிடித்தமானது. எனக்கு தெரிந்த வரை விராட் கோலி களத்தில் எவ்வளவு ஆக்ரோஷத்துடன் காணப்படுகிறாரோ, அதற்கு நேர்மாறாக களத்திற்கு வெளியில் அமைதியாக இருப்பார் என்று தெரிவித்துள்ளார்.

RELATED ARTICLES

Recent News