மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த ஜூலை 14-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் ‘மாவீரன்’. இப்படம் தமிழ், தெலுங்கு ஆகிய 2 மொழிகளில் வெளியாகி மக்களின் கவனங்களை ஈர்த்தது. இதில் அதிதி ஷங்கர், சரிதா, இயக்குனர் மிஷ்கின் மற்றும் யோகி பாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்நிலையில் இப்படமானது ரூ.75 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது .
இதனைத்தொடர்ந்து , ‘மாவீரன்’ திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.அதன்படி, இப்படம் வருகிற 11-ஆம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. இதனை படக்குழு போஸ்டர் ஒன்றை பகிர்ந்து அறிவித்துள்ளனர்.
தற்போது ,இப்போஸ்டரை சிவகார்த்திகேயன் ரசிகர்கள் ஷேர் செய்து வைரலாகி வருகின்றனர்.