ரெடியான பும்ரா; ரசிகர் உற்சாகம்!

இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளா் ஜஸ்ப்ரீத் பும்ரா முழு உடல் தகுதி பெற்றுள்ள நிலையில், அயா்லாந்து தொடருக்கான அணியில் இடம் பெறலாம் என பிசிசிஐ செயலாளா் ஜெய் ஷா கூறியுள்ளார்.

இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா காயம் காரணமாக ஓராண்டுக்கும் மேலாக ஓய்வில் இருக்கிறார். கடைசியாக கடந்த ஆண்டு நடைபெற்ற ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக ஒருநாள் போட்டியில் விளையாடினார். அதன் பின் காலில் ஏற்பட்ட காயத்திற்கு சிகிச்சை எடுத்துக் கொண்ட அவர், 6 மாதமாக ஓய்வில் இருந்தார்.

தற்போது தேசிய கிரிக்கெட் அகாடமியில் தீவிர பயிற்சி மேற்கொண்டு வரும் பும்ரா, ஒரே நாளில் 9 ஓவர்கள் வரை வீசி வருகிறார். அதுமட்டுமல்லாமல் பும்ரா முழுமையான உடல் தகுதியை பெறுவதற்காக என்சிஏ சார்பாக சில பயிற்சி போட்டிகளையும் ஏற்பாடு செய்துள்ளது. அந்தப் போட்டிகளிலும் பும்ரா பங்கேற்று விளையாடி வருகிறார்.

இதனால் அயர்லாந்து அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பும்ரா பங்கேற்க வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் சீனியர் வீரர்கள் பங்கேற்காத நிலையில், காயத்தில் இருந்து கம்பேக் கொடுக்க உள்ள வீரர்களையும் இளம் வீரர்களோடு சேர்த்து அனுப்ப பிசிசிஐ மற்றும் தேர்வுக் குழு இணைந்து திட்டமிட்டுள்ளது.

பும்ரா மீண்டும் அணியில் இடம் பெற்றால் ஒருநாள் உலகக் கோப்பையில் பங்கேற்கும் இந்திய அணிக்கு புதிய பலம் கிடைக்கும்.

RELATED ARTICLES

Recent News