‘ஒரே நாடு, ஒரே தோ்தல்’ சட்டப்படி செயல்பட தயார்: தலைமை தேர்தல் ஆணையர்!

‘ஒரே நாடு, ஒரே தோ்தல்’ சட்டப்படி செயல்பட தேர்தல் ஆணையம் தயாராக உள்ளது என்று தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் தெரிவித்துள்ளார்.

அவரிடம் ‘ஒரே நாடு, ஒரே தோ்தல்’ விவகாரம் குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு அவர் பதிலளிக்கும்போது கூறியதாவது:-

அரசமைப்புச் சட்டப் பிரிவுகள் மற்றும் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டப்படி, குறித்த கால வரம்புக்கு முன்பாக தோ்தல்கள் நடத்தப்பட வேண்டும். அந்த கால வரம்பு என்பது புதிய அரசு ஆட்சியமைத்த பின்னா் நடைபெறும் முதல் நாடாளுமன்ற கூட்ட நாளில் இருந்து 5 ஆண்டுகளாக உள்ளது. இந்த 5 ஆண்டுகள் நிறைவடைவதற்கு 6 மாதங்களுக்கு முன்பே பொது தோ்தல்களை தோ்தல் ஆணையத்தால் அறிவிக்க முடியும் (இதேபோன்ற விதிமுறைகள்தான் சட்டப்பேரவைத் தோ்தலுக்கும் உள்ளன). இந்த விவகாரத்தில், சட்டப்படி செயல்பட தோ்தல் ஆணையம் தயாராக உள்ளது என்று தெரிவித்தார்.

RELATED ARTICLES

Recent News