Connect with us

Raj News Tamil

ஜெயம் ரவிக்கு விவாகரத்து? இதுதான் காரணமா?

சினிமா

ஜெயம் ரவிக்கு விவாகரத்து? இதுதான் காரணமா?

ஜெயம் ரவியும், அவரது மனைவி ஆர்த்தியும் விவாகரத்து செய்ய இருக்கிறார்கள் என்று, தகவல் ஒன்று பரவி வருகிறது.

இதனை உறுதியாக்கும் வகையில், ஜெயம் ரவி உடனான அனைத்து புகைப்படங்களையும், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து, ஆர்த்தி தூக்கியிருக்கிறார்.

இந்நிலையில், இவர்களது விவாகரத்துக்கான காரணம் குறித்து, தகவல் ஒன்று கசிந்திருக்கிறது. அதாவது, ஜெயம் ரவியின் புதிய படத்தை அவரது மாமியார் தயாரிக்க முன்வந்துள்ளார்.

அந்த படத்திற்கு, 25 கோடி ரூபாயை ஜெயம் ரவி சம்பளமாக கேட்டிருக்கிறார். இதன்காரணமாக, மாமியார்-மருமகன் இடையே, சில சலசலப்புகள் ஏற்பட்டுள்ளதாம். இந்த தொழில் ரீதியான பிரச்சனை, குடும்ப பிரச்சனையாக மாறியிருக்கிறதாம்.

இதனால், தொடர்ச்சியாக தகராறு ஏற்பட்டு, அது விவாகரத்தில் முடிந்துள்ளது என்று பயில்வான் ரங்கநாதன் கூறியிருக்கிறார். இந்த தகவல், பலருக்கும் அதிர்ச்சியை அளித்துள்ளது.

More in சினிமா

To Top