அஜித் நடிப்பில், மகிழ் திருமேனி இயக்கத்தில், விடாமுயற்சி என்ற திரைப்படம் உருவாகி வருகிறது. இந்த திரைப்படம், வரும் பொங்கல் பண்டிகைக்கு ரிலீஸ் ஆகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில், இந்த திரைப்படம் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகாது என்று, படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.
இந்த தகவல், அஜித் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்நிலையில், ரிலீஸ் தாமதம் ஆவதற்கான காரணம் குறித்து, புதிய தகவல் கிடைத்துள்ளது. அதாவது, பல நாடுகளில் ரிலீஸ் செய்வதற்கு, அந்தந்த நாடுகளுக்கு ஏற்ப, படத்தை சென்சார் செய்ய வேண்டும். ஆனால், அதற்கு ஏற்ற வகையில், மகிழ் திருமேனி முன்கூட்டியே படத்தை தயார் செய்யவில்லையாம்.
மேலும், பிரேக் டவுன் படத்தின் ரீமேக் உரிமையை, லைக்கா நிறுவனம் பெறவில்லையாம். இதனால் ஏற்பட்ட பிரச்சனையாலும், ரிலீஸ் தாமதம் ஆகியுள்ளது.
மேலும், படத்தின் பின்னணி இசையும், மிக்ஸிங் பணிகளையும், படக்குழுவினர் முடிக்கவில்லையாம். இவ்வாறு பல்வேறு பாம்புகள், விடாமுயற்சி-யின் கழுத்தை நெறிப்பதால் தான், அதனை ரிலீஸ் செய்ய முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.