துரைப்பாக்கத்தில் அடையாளம் தெரியாத பெண்ணை கொலை செய்து டிராலி சூட்கேசில் போட்டு சாலையோரம் வீசியுள்ளனர்.
சென்னை துரைப்பாக்கம் குமரன் குடில் பிரதான சாலையோரம் கேட்பாரற்று டிராலி சூட்கேஸ் ஒன்று இருந்துள்ளது. அருகில் கட்டிட வேலை செய்ய வந்த நபர்கள் பார்த்து விட்டு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவலறிந்த வந்த போலீசார், சூட்கேசை மீட்டு திறந்து பார்த்தனர். அதில், பெண் சடலம் துண்டு துண்டாக வெட்டப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
பெண்ணின் உடலை மீட்ட போலீசார், உடனடியாக விசாரணையை தொடங்கியுள்ளனர்.
முதல் கட்ட விசாரணையில், சடலமாக மீட்கப்பட்ட பெண் மாதவரம் சேர்ந்த தீபா (32) என்பதும் திருமணமாகாதகவர் என்றும் தெரியவந்துள்ளது. மேலும், இந்த விவகாரத்தில் ஒருவரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.