2 மாவட்டங்களுக்கு இன்று ரெட் அலர்ட்!

வங்க கடலில் உருவான பெஞ்சல் புயல் கரையைக் கடந்த பிறகு காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் வலு இழந்துள்ளது.

இது தற்போது வடமேற்கு திசையில் உள் மாவட்டங்கள் நோக்கி நகர்ந்து இன்று (டிச.2) ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுவிழக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களுக்கு இன்று அதிகனமழைக்கான சிவப்பு எச்சரிக்கையும், திருப்பூர், ஈரோடு, தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கையும் வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது.

மேலும், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல், பெரம்பலூர், திருச்சி, கரூர், மதுரை, விருதுநகர் மற்றும் தென்காசி மாவட்டங்களில் லேசான மழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

RELATED ARTICLES

Recent News