வங்கக்கடலில் உருவாகியுள்ள ஃபெஞ்சல் புயலின் காரணமாக, சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில், கனமழை பெய்து வருகிறது. இதனால், சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட 9 மாவட்டங்களில், பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.
மேலும், திரையரங்குகள், நகைக் கடைகள், மின்சார ரயில்கள், விமான நிலையம் உள்ளிட்டவை இயங்காது என்றும், தொடர்ச்சியாக அறிவிப்புகள் வந்துக் கொண்டிருக்கிறது. இதுமட்டுமின்றி, இரவு 10 மணிக்கு மேல் புயல் கரையை கடக்க வாய்ப்பு இருப்பதால், பொதுமக்கள் நாளை காலை வரை வீட்டை விட்டு வெளியில் வரவேண்டாம் என்றும், அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது.
மேலும், நிவாரணப் பணிகள் முழுவீச்சில் நடந்து வருவதாகவும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேட்டி அளித்திருக்கிறார். இந்நிலையில், தமிழகத்தில் 7 மாவட்டங்களுக்கு இன்றும், நாளையும் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் ஆகிய 7 மாவட்டங்களில் அதிகனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதாக, சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.