Connect with us

Raj News Tamil

5 முன்னணி நடிகர்களுக்கு ரெட் கார்டு? – அதிரடி முடிவெடுத்த தயாரிப்பாளர் சங்கம்!

சினிமா

5 முன்னணி நடிகர்களுக்கு ரெட் கார்டு? – அதிரடி முடிவெடுத்த தயாரிப்பாளர் சங்கம்!

நடிகர்களுக்கும், தயாரிப்பாளர்களுக்குமான உறவு சரியாக இருந்தால் தான், ஒரு படைப்பு சிறந்த முறையில் வெளியாகும். ஆனால், அந்த உறவில், ஒரு சில நடிகர்களாலும், தயாரிப்பாளர்களாலும், பாதிப்பு ஏற்படுவது வழக்கமாக இருந்து வருகிறது.

அந்த வகையில், தயாரிப்பாளர்களுக்கு தொல்லைக் கொடுத்து வந்த 5 முன்னணி நடிகர்களுக்கு, ரெட் கார்டு கொடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதாவது, தயாரிப்பாளர் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம், இன்று சென்னையில் நடைபெற்றது. சங்க நிர்வாகிகள் கலந்துக் கொண்ட இந்த கூட்டத்தில், சிம்பு, விஷால், எஸ்.ஜே.சூர்யா, யோகி பாபு, அதர்வா ஆகிய 5 முன்னணி நடிகர்களுக்கு, ரெட் கார்டு கொடுக்கப்பட்டுள்ளதாக தகவல் கசிந்துள்ளது.

கால்ஷீட் வாங்கிக் கொண்டு, படப்பிடிப்புக்கு வராமல் இருந்தது, தயாரிப்பாளர்களுக்கு நஷ்டம் ஏற்படுத்தியது உள்ளிட்ட காரணங்களுக்காக, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in சினிமா

To Top