Connect with us

Raj News Tamil

சவுக்கு சங்கர் சர்ச்சை பேச்சு…மன்னிப்பு கேட்ட ரெட்பிக்ஸ்

தமிழகம்

சவுக்கு சங்கர் சர்ச்சை பேச்சு…மன்னிப்பு கேட்ட ரெட்பிக்ஸ்

காவல் துறை அதிகாரிகள் மற்றும் பெண் போலீசார் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் சவுக்கு சங்கர் கடந்த 4ம் தேதி கோவை சைபர் கிரைம் போலீசாரால் கைது செய்யப்பட்டார். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இதையடுத்து சவுக்கு சங்கர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

இந்நிலையில் பெண் காவலர்கள் குறித்து சவுக்கு சங்கர் பேசியதில் உடன்பாடு இல்லை என்றும் அதனை வெளியிட்டதற்காக மன்னிப்பு கேட்டுக் கொள்வதாகவும் ரெட்பிக்ஸ் செய்தி நிறுவனம் அறிவித்து உள்ளது.

இது தொடர்பாக அந்நிறுவனத்தின் பொதுமேலாலர் ஜென் பெலிக்ஸ் சார்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில், சவுக்கு சங்கர் பேசிய சர்ச்சைக்குரிய பேச்சில் RED PIX-க்கு உடன்பாடு இல்லை, அது RED PIX-ன் கருத்தும் இல்லை. இருப்பினும் அந்த காணொளியால் காவல்துறையில் பணியாற்றும் பெண்கள் வருத்தம் அடைந்துருப்பதால் RED PIX நிறுவனம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறது.

கடந்த 30-04-2024 அன்று Why Savukku Media is Targeted? என்ற தலைப்பில் நமது RED PIX ஊடகத்தின் ஆசிரியர் பெலிக்ஸ் ஜெரால்டு, சவுக்கு சங்கரை நேர்காணல் செய்தார் அந்த நேர்காணலில் தமிழ்நாடு காவல்துறையில் பணியாற்றும் பெண்கள் குறித்து சவுக்கு சங்கர் பேசிய சர்ச்சைக்குரிய கருத்து சவுக்கு சங்கரின் கருத்துதானே தவிர RED PIX ஊடகத்தின் கருத்து அல்ல. பெண்களின் மாண்பையும், சுயமரியாதையையும் மிக உயர்வாக RED PIX ஊடகம் கருதுகிறது சவுக்கு சங்கர் பேசிய அந்த சர்ச்சைக்குரிய கருத்து காவல்துறையில் பணியாற்றும் பெண்களுக்கு மிகுந்த மனவருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

எனவே அந்த காணொளியை ஒளிபரப்பியதற்காக RED PIX ஊடகம் மனம்திறந்த மன்னிப்பு கேட்டுக்கொள்கிறது. சர்ச்சைக்குரிய அந்த காணொளி வழக்கு நிலுவையில் உள்ளதாலும் காவல்துறை விசாரணைக்கு தேவைப்படுவதாலும் வேறு யாரும் பார்க்காத வண்ணம் PRIVATE செய்யப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Continue Reading
Advertisement
You may also like...

More in தமிழகம்

To Top