ரஜினிகாந்த், நெல்சன் கூட்டணியில் உருவான திரைப்படம் ஜெயிலர். மிகப்பெரிய வெற்றிப் பெற்ற இந்த திரைப்படம், கிட்டதட்ட 600 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்து, சாதனை படைத்தது. தற்போது, இரண்டாம் பாகத்தை தயாரிப்பதற்கான பணிகள், விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
இந்நிலையில், இப்படத்தின் ரிலீஸ் தொடர்பான புதிய தகவல் ஒன்று இணையத்தில் பரவி வருகிறது. அதாவது, இந்த திரைப்படத்தின் தயாரிப்பு பணிக்கு, 13 மாதங்கள் தேவை என்று, தயாரிப்பாளரிடம் நெல்சன் தெரிவித்துள்ளாராம்.
இதனால், தீபாவளி அன்று ரிலீஸ் செய்யலாம் என்று முடிவு செய்யப்பட்ட இந்த திரைப்படம், 2026-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் ரிலீஸ் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நெல்சன் விதித்துள்ள இந்த கண்டிஷன், படத்தின் தரத்தை மேம்படுத்துவதற்காக என்றும் கூறப்படுகிறது.